திண்டிவனத்தில் ராகுல்காந்தியின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

திண்டிவனத்தில் ராகுல்காந்தியின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதானம்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் 52.வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமையில் திண்டிவனம் காங்கிரஸ் கமிட்டி சார்பில்  நகர தலைவர் விநாயகம், முன்னிலையில் திண்டிவனம் இரயிலடி விநாயகர் கோவிலில்  எம்பி ராகுல் காந்தி நலமுடன் வாழ சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

அதனை தொடர்ந்து நகர காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றி அன்னதானமும்  மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளும்  பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அதிகாரி பாபுராவ் கருணாகரன், பொருளாளர் கருணாகரன், முன்னாள் மாவட்டத் தலைவர் தனுசு, விக்ரவண்டி நகர தலைவர் குமார், நகர துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் மதன்குமார், நகர பொதுச் செயலாளர் பொன். ராஜா, வழக்கறிஞர் அஜிஸ், மாவட்ட ஊடக பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ், ரகமத்துல்லா கான், கனகராஜ், பாபு, சாமிநாத ஐயர், அர்ஜுனன், மெடிக்கல் வெங்கட் உள்பட பலர் பங்கேற்றனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad