இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் சதாசிவம் வயது 45 மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வினிதா என்ற சுசித்ரா இவர்களுக்கு மோனிஷ் வயது 11 என்ற மகன் உள்ளார்
அண்ணா நகரில் சதாசிவம் வசித்து வரும் வீடு வாடகை வீடு ஆகும் இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முறுக்கேரி அருகே சாத்த மங்கலத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சதாசிவம் குடும்பத்துடன் சென்றிருந்தார், அங்கிருந்து நேற்று மதியம் அண்ணா நகருக்கு வந்தஅவர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பின் பக்கத்தில் இருந்த கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்குள்ள அறையில் இருந்த பீரோவை சென்று பார்த்தார் பீரோ கதவு திறந்த நிலையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன மேலும் அதில் இருந்த 13.1/2 பவுன் நகை ரூ1.1/2 லட்சம் ஆகியவை கொள்ளை போயிருந்தது கொள்ளைப் பணம் நகையின் மதிப்பு சுமார் 4 .1/2 லட்சம் இருக்குமென கூறப்படுகிறது இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா பிரதேச போலீஸ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார் மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் சென்று சுற்றி வந்தது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை கைரேகை நிபுணர் செல்வகுமார் சரவணன் நேரில் சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சோதித்தார் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment