நீதிமன்ற உத்தரவு படியும். மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட பசுமைக் குழு பரிந்துரையின் பேரில் அன்னம்புத்தூர் கீழ் சித்தாமூர் ஓமந்தூர் ஆகிய கிராமங்களில் உள்ள நீர்நிலை புறம்போக்கு 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சவுக்கு மரங்களை அகற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பயிரிடப்பட்டுள்ள அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது 10 நாட்களுக்குள் மரங்களை அகற்ற வேண்டும் இல்லையேல் பொதுப்பணித்துறை உடன் அகற்ற நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் உள்ள பல்வேறு பகுதிகளில்782 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களில் மாதந்தோறும் 50 ஹெக்டர் நிலங்களை மீட்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதேபோல் திண்டிவனம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமித்துள்ள அவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment