திண்டிவனம் இந்து முன்னணி மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

திண்டிவனம் இந்து முன்னணி மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்.

திண்டிவனம் அவரப்பாக்கம் துலுக்கானம் தெருவை சேர்ந்தவர் TNK.பிரபு இவர் இந்து முன்னணி விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் மற்றும் இவரது சகோதரர் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு நபருக்கும் இவரது சகோதரருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகத் தெரிகிறது, இதன் காரணமாக தன் அண்ணனுக்கு கைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு கோயம்பேடு சென்னையை சேர்ந்தவர்கள் மிரட்டியதாகவும் அதன்பிறகு தனது செல்போனுக்கு தொடர்பு கொண்ட சென்னை சேர்ந்த நபர்கள் தன்னை இந்து முன்னணி மாவட்ட செயலாளராக இருந்தால் எங்களுக்கு என்ன சென்னைக்கு நீங்கள் வந்தால் உங்களை கொலை செய்து கோயம்பேட்டில் புதைத்து விடுவதாகவும் இந்து முன்னணியை பற்றி தரைகுறைவாக பேசியதாகவும், திண்டிவனம் காவல் நிலையத்தில் TNK. பிரபு தனக்கு தனது அண்ணனுக்கும் கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது புகார் மனு கொடுத்துள்ளார், அதனடிப்படையில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad