திண்டிவனத்தில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

திண்டிவனத்தில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகே அரசு வங்கி தேர்வில் தமிழ்நாட்டில் தமிழுக்கு இடம் அளிக்காததை கண்டித்து திராவிட கழக இளைஞரணி சார்பில்  கண்டன கோஷம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் தம்பி கா.மு பிரபாகரன், தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் தமிழ் இளைஞர்களுக்கு வங்கிகளில் வேலை இல்லை எனவும். பறிக்காதே! பறிக்காதே! தமிழ்நாட்டின் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்காதே! தாரை வார்க்காதே! தாரை வார்க்காதே! தமிழ்நாட்டு வங்கிப் பணிகளில் வடநாட்டவர் க்கு  தாரை வார்க்காதே! என கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷம் எழுப்பினர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் அன்பழகன், அமைப்பாளர்   நவா ஏழுமலை, இளைஞர் அணி தலைவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி  செயலாளர் மாரிமுத்து, அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் பெருமாள், மயிலம் ஒன்றிய செயலாளர் அன்புக்கரசன், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். 


இதில் மாவட்ட துணை அமைப்பாளர் வில்லவன் கோதை, விழுப்புரம் மண்டல செயலாளர் கா. மு.இளம்பரிதி,மண்டல மகளிரணி தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ், கடவம் பாக்கம் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சுகன், மாவட்ட மாணவரணி பிரகாஷ், திண்டிவனம் நகர தலைவர் பச்சையப்பன், அமைப்பாளர் ஜனார்த்தனன்,துணைத் தலைவர் பாபு, செயலாளர் பன்னீர்செல்வம்,ஒன்றிய அமைப்பாளர் ஸ்ரீதர், உள் பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திண்டிவனம் தேவராஜ், நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad