அதிவிரைவு படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

அதிவிரைவு படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாம்.

மத்திய அரசின் அதிவிரைவு படையினர் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காவல் நிலைய எல்லை பகுதி யில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர், மத்திய அரசில் விரைவு அதிரடிப்படை குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இக்குழு கலவரம் மற்றும் அதுதொடர்பான அமைதியின்மையை கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் துணை இராணுவப் பிரிவு ஆகும்.


குழுவில் ஒரு டி.எஸ்.பி., மற்றும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 60 போலீசார்  விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டனர், இவர்கள் மாவட்டத்தில் ஒரு வாரம் முகாமிட்டு, மாவட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் கலவரங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்த இடங்களை கண்டறிந்து விரைந்து செல்ல வழிமுறைகளையும் பாதைகளையும் கண்டறிய ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல்  கண்டாச்சிபுரம், விக்ரவண்டி, திண்டிவனம், மற்றும் ரோசனை, ஆகிய போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.


அதேபோல் திண்டிவனம் காவல் நிலையம் ரோசனை காவல் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பொழுது திண்டிவனம் காவல்உதவி ஆய்வாளர் ஆனந்தராசன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சுகுமார், தனிப்பிரிவு ஆதி, மற்றும் போலீசார் லட்சுமிநாராயணன், ஐய்யனார், ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad