இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மூன்று பேரும் தாய் தந்தையரிடம் தனது பாட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி வற்புறுத்தினர் . இதனால் நேற்று முன்தினம் மரக்காணம் அடுத்த பெருமுக்கலில் உள்ள தனது பாட்டி புஷ்பாராணி (60 ) என்பவர்வீட்டிற்கு வந்தனர், தந்தை சாமிநாதன் சென்னையில் தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார் தாய் விஜயஸ்ரீ தனது அம்மா புஷ்பா குழந்தைகளை பார்க்கச் சொல்லிவிட்டு சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு சுமார் 80 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டையில் கரையில் புஷ்பராணி துணி துவைத்து விட்டு குளித்துக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது, அந்த சமயத்தில் குழந்தைகள் 3 பேரும் அடுத்தடுத்து குழியில் தவறி விழுந்துள்ளனர். இதை பார்த்து செய்வதறியாது திகைத்த புஷ்பராணி பேரக்குழந்தைகள் 3 பேரையும் காப்பாற்ற முயற்சித்தார் . கூச்சலிட்டபடி பதற்றத்தில் குட்டையின் நடுப்பகுதிக்கு சென்றபோது இதில் அவரும் தவறி விழுந்ததில் 4 பேரும் தண்ணீர் தத்தளித்து சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புஷ்பா கத்திய அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது குட்டையின் கரையில் உடைகள் மட்டுமே இருந்துள்ளது, பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா. இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியோடு குட்டையில் மூழ்கிய வினோதினி, ஷாலினி, கிருஷ்ணன், புஷ்பராணி, ஆகியோரைக் சடலமாக மீட்டனர். தொடர்ந்து போலீசார் பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே திண்டிவனம் சப் கலெக்டர் அமித் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, மரக்காணம் தாசில்தார் சரவணன், ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து 4 பேர் பலியான குட்டையை பார்வையிட்டனர்.
பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி 4பேர் குழந்தைகள் 3 பேருடன் பெண் பலியான சம்பவம் தென் களவாய். மற்றும் பெருமுக்கல் . பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment