இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்
விழுப்புரம் மாவட்டம் தீவனூர் அருகே உள்ள கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மகன் ரமேஷ் வயது 30 இவர் சென்னையை அடுத்த மறைமலை நகரில் ஜவுளி கடை நடத்தி வந்தார் அவருடைய உறவினர் ரங்கநாதன் வயது 25 சென்னையில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நண்பர்களான இவர்கள் நேற்று திண்டிவனம் அடுத்த ரெட்டனையில் நடந்த உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திண்டிவனம் அடுத்த கொள்ளார் செஞ்சி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர் அப்போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
3 பேர் பலி
இந்த விபத்தில் ரமேஷ், ரங்கநாதன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர் அந்த சமயத்தில் பின்னால் வந்த லாரி அவர்கள் மீது ஏறியது இதில் லாரி சக்கரத்தில் சிக்கி ரங்கநாதன், ரமேஷ், ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ரோசனை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு இளைஞர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை தீவனூர் அருகே போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
No comments:
Post a Comment