விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட நொளம்பூர் தி.மு.க கிளை சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 99 முதியவர்களுக்கு வேட்டி, சேலை, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள், மரக்கன்றுகள். மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய பெருந்தலைவர். சொக்கலிங்கம், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராகதி.மு.க. மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி சீதாபதி சொக்கலிங்கம், கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை வழக்கறிஞர் அணி சார்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிகாமணி அவர்கள் செய்திருந்தார். மேலும் இதில் ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேன்மொழி நெடுஞ்செழியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கவிஞர். புரட்சிதாசன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment