விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக நகர தலைவர் தினேஷ் குமார் அவர்கள் அறிவுறுத்தலின் படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு திண்டிவனம் பிரபாகரி வெங்கடேச பெருமாள் தலைமையில், சிறப்பு அழைப்பாளர் பிறமொழி பேசுவோர் அணி மாநிலச் செயலாளர் வினோத்குமார் முன்னிலையில் 25 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வியை ஊக்குவிக்கும் விதமாக ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊடகப்பிரிவு துணை தலைவர் துரை சோழன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரன், திண்டிவனம் நகர துணைத்தலைவர்கள் தண்டபாணி, கார்த்திக், நகர பொதுச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், டாக்டர் ராதிகா, நகர செயலாளர்கள் லதா சண்முகம, ரஜினிகாந்த், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு நகர தலைவர் நாகராஜன், ஊடகப்பிரிவு செயலாளர் சரண்ராஜ், மற்றும் பாஜக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment