திண்டிவனத்தில் சுதந்திர போராட்ட முதல் மாவீரர் படத்திற்கு மரியாதை! - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 July 2022

திண்டிவனத்தில் சுதந்திர போராட்ட முதல் மாவீரர் படத்திற்கு மரியாதை!

திண்டிவனம் சுதந்திரப் போராட்ட முதல்  மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை குருபூஜையாக கொண்டாடினர்


சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதனிடையே அவரின் 265 வது குருபூஜை விழா நடைபெற்றது.


அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் (ட்விட்டரில்) பக்கத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் உயிரை விட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம்! எனவும் 18-ஆம் நூற்றாண்டிலேயே விடுதலை கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலை சிதறக் கொடுத்து வரலாற்றில் நீங்க இடமும்-மாங்கா புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் அவரது! எனவும் கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க! எனவும் பதிவிட்டுள்ளார்.


இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் திண்டிவனத்தில் மேம்பாலம் கீழ்பகுதியில் சுதந்திரப் போராட்டதலைவன் பிறந்தநாளை திண்டிவனம் வட்டார யாதவர் நல சங்கம் திண்டிவனம் யாதவ மகா சபை & சுற்று வட்டாரங்கள் யாதவ பொதுமக்கள் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் மாமன்னர்  அழகுமுத்துக்கோன் அவர்களின் 265 வது குருபூஜை விழா முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், ஒலக்கூர் ஒன்றிய  செயலாளர் ராஜாராம், ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி  அன்னதானம் வழங்கப்பட்டது.


இதில் திண்டிவனம் வட்டார யாதவ நல சங்கத்தின் தலைவர் பொன்னரசு, துணைத்தலைவர் அகூர் ஆனந்து, செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் தாதாபுரம் பாலாஜி, பொருளாளர் பாம்முண்டி ராஜேந்திரன், மற்றும் சங்க நிர்வாகிகள் பெரப்பேரி கமலக்கண்ணன், ஊரல் ஏழுமலை, சட்ட ஆலோசகர்கள் மூத்த வழக்கறிஞர் செந்தாமரைக்கண்ணன், வைரபுரம் வழக்கறிஞர் பாஸ்கர், அன்னம்புத்தூர் வழக்கறிஞர் பாலச்சந்திரன், கட்டளை வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் , மற்றும் ஏராளமான  நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad