திண்டிவனத்தில் சுதந்திரப் போராட்ட முதல் மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் குரு பூஜை விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மயிலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், ஒலக்கூர் ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாராம், மற்றும் திண்டிவனம் வட்டார யாதவர் நல சங்கம் தலைவர் பொன்ரசு, துணைத் தலைவர் அகூர்ஆனந்த், செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர் தாதாபுரம் பாலாஜி, பொருளாளர் பாம்பூண்டி ராஜேந்திரன், மற்றும் சங்க நிர்வாகிகள் பெரப்பேரி கமலக்கண்ணன் ,ஊரல் ஏழுமலை, சட்ட ஆலோசர்கள் வழக்கறிஞர்கள் செந்தாமரை கண்ணன், வைரபுரம் பாஸ்கர், அன்னம்புத்தூர் பாலச்சந்திரன்,கட்டளை ஜெய்ச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment