விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஸ்ரீ. லட்சுமி நரசிம்மர், திருக்கோவிலில் பகவான் கிருஷ்ணர், அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் அன்னதானமும் செய்து கிருஷ்ணர், வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாட்டிய குதிரைகளின் நாட்டிய நடனமும், வான வேடிக்கைகளும் கேரளா சண்டிமேல தாளங்களுடன், சிறுவர்களின் சிலம்பாட்டமும் வானவேடிக்கையுடன் சுவாமி வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திண்டிவனம் யாதவமகா சபைசார்பில் நகரமுக்கிய பகுதிகளில் உறியடி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு யாதவமகா சபை சார்பில் தலைவர் கோபி, தலைமை தாங்கினார், செயலாளர் குமார், பொருளாளர் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் வழக்கறிஞர். செந்தாமரை கண்ணன், முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர்சேதுநாதன், கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment