திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யா மொழி விநாயகர் ஆலயத்தில் சின்னத்திரை நடிகர் புகழின் திருமணம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 September 2022

திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யா மொழி விநாயகர் ஆலயத்தில் சின்னத்திரை நடிகர் புகழின் திருமணம்.

திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யா மொழி விநாயகர் ஆலயத்தில் சின்னத்திரை நடிகர் புகழின் திருமணத்தில் ஏராளமானோர்  கலந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி என்கிற புகழ், இவர் சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றார்.


மேலும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இன்று இவருக்கும் கோவை மாவட்டம் போந்தனூர் பகுதியைச் சேர்ந்த உமர் - பரித்தா  இவர்களின் மகள் ஃபென்சியா என்பவருக்கும் இந்து முறைப்படி  திருமணம் நடைபெற்றது. சின்னத்திரை நடிகருக்கு திருமணம் என்று கேள்விப்பட்ட  அந்த பகுதியைச்  சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இந்த திருமணத்தை நேரில் காண வருகை தந்தனர். மேலும் இந்த திருமணத்தில் பல்வேறு திரைப்படத்துறையினர், அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad