திண்டிவனம் அருகே புறங்கரை கிராமத்தில் உள்ள மாதா கோவில் எதிரே அப்பாகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் உள்ளது. டிரான்ஸ்பார்மர்களுக்கு செல்லும் உயர் மின்னழுத்த கம்பி நேற்று மாலை அருந்து அதிலிருந்து பிரிந்து செல்லும் மின் கம்பிகள்மீது விழுந்தது இதில் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் இருந்த 108 ஓட்டுநர் ஞானவேல் என்பவரது வீட்டில் மின்மீட்டர் மற்றும் மின் சாதன பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
இதேபோல் விவசாயிகள் நீலகண்டன், ராஜசேகர், சுந்தரம், மனோகர், உள்ளிட்டோரியின் வயல்களில் இருந்த விவசாய மோட்டார்களும் சேதம டைந்தன. தகவல் அறிந்து வந்த மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து அங்கிருந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணி ஈடுபட்டனர் புறங்கரை கிராமத்தில் உயர் மின்னழுத்த கம்பி செல்லும் பாதையில் உள்ள மரங்களை வெட்டாதால் மின்விபத்து ஏற்பட்டதாகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
No comments:
Post a Comment