விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை பழமை வாய்ந்த சிறப்பு மிக்க சுற்றுலாத்தலமாக உள்ளது. அந்த வகையில் புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

அதன்படி ராஜ கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செஞ்சி கோட்டையில் உச்சிக்கு செல்ல கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறி செல்ல வேண்டும். இயற்கை சூழலுடன் அமைந்திருப்பதால் இந்த இடத்தை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதில் செஞ்சி கோட்டையின் மீது உள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவிலில் ஆலய ரத உற்சவ திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு செஞ்சி ராஜ கோட்டைக்கு செல்லும் சுற்றுலா பகுதிகளுக்கு இன்று முதல் 10 நாட்களுக்கு இலவச அனுமதி அளிப்பதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment