அதன் பின்பு இரவு 9.30 மணியளவில் அருள் சக்தியின் தகப்பனார் முருகன் வயதான தம்பதியின் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தந்தையும் தாயும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் இரவு வீட்டிற்கு சென்று பார்த்தபோது வயதான இருவரும் வாயில் நுரையுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

வயதான தம்பதியை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனரா அல்லது தலையானியை வைத்து மூச்சி அடைத்து கொலை செய்துள்ளனரா என்ற கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். போலீசார் விசாரனையில் அருள் சக்தி வயதான தம்பதியினரை கொலை செய்துவிட்டு தந்தையான முருகனிடம் மது போதையில் உனது தாயையும் தந்தையையும் கொலை செய்துவிட்டதாகவும் உன்னையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் விசாரனை செய்து வருகிற நிலையில் அருள் சக்தி தனது மொபைல் என்னை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதால் அருள் சக்தியை போலீசார் தேடிவருகின்றனர்.
No comments:
Post a Comment