திருவெண்ணெய் நல்லூர் அருகே கொத்தனூர் கிராமத்தில் சிறுவன் வெட்டி கொலை
சக நண்பருடன் பேச மறுத்ததால் கொலை நடந்ததாக போலீசார் விசாரணை தகவல்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ராமச்சந்திரன்(17) சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாய் ஈரோட்டில் கரும்பு வெட்டும் வேலை செய்து வருகின்றார். இவரது பாட்டி பவுனம்பாம்பாள்(60 ) என்பவருடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ரோட்டில் உள்ள கடையின் அருகில் ஏன் என் கிட்ட பேச மாட்டுகிறாய் என்று கேட்டு நண்பர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு இவர் வீட்டிற்கு வந்து வீட்டின் பக்கத்தில் உள்ள மரத்தில் ஊஞ்சல் கட்டி தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (20) என்பவர் அவருடன் இன்னொருவர் இரண்டு பேரும் சேர்ந்து கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணங்கள் குறித்து போலீஸ் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment