
உடனே சமயோகிதமாக செயல்பட்ட காவலர் மதன், மாணவரின் விலாசம் தென்கோடிபாக்கம் (நான்ங்கு கிலோ மீட்டர்) கிராமம் என கேட்டு தெரிந்து கொண்டு அந்த ஊர் பக்கம் இன்றைய பகல் ரோந்து காவலர் யார் என்று காவல் நிலையத்தில் Si திரு விஜயகுமார் அவர்களிடம் கேட்டு விசாரித்து உடனே அந்த காவலர் Pc 260 மணிகன்டன் என்பவருக்கு போன் செய்து தகவல் சொல்ல, உடனே காவலர் மணிகன்டன், அவர்கள் சிறிது தொலைவில் உள்ள மாணவரின் வீட்டிற்கு சென்று மாணவரை சந்தித்து ஏன் தேர்வு எழத செல்லவில்லை என கேட்க அவரின் பெற்றோருடன் சண்டையிட்டு அழுதுகொண்டு தேர்வு எழுத செல்லாமல் மறுத்துள்ளார்.
உடனே காவலர் நேரமின்மையை கருத்தில் கொண்டு Pc மணிகன்டன், மாணவனை சமாதானபடுத்தி தனது இருசக்கர வாகணத்தில் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் அழைத்து வந்து அறிவுரை கூறி தலைமை ஆசிரியர் அனுமதியுடன் 10.10 க்கு தேர்வு அறைக்கு அனுப்பியுள்ளார். பின்னர் மாணவர் நல்ல முறையில் தேர்வு எழுதி முடிந்து நிலையம் வந்து ரோந்து காவலர் மணிகன்டன் அவர்களுக்கும் இதற்கு காரணமாய் இருந்த Gr,I Pc மதன் அவர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து நெகிழ்சியுடன் சென்றார்.
No comments:
Post a Comment