விழுப்புரம் மாவட்டம் பிடாகம் நத்தமேடு பகுதியைச் சார்ந்தவர் காசிநாதன் இவருடைய மகன் லட்சுமணன் வயது 35. இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இவர் நேற்று காலை 7 மணி அளவில் விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.


அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் இவர் மீது மிளகாய் பொடியை தூவி கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட ரவுடி லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என காவல்துறை விசாரணை செய்து வருகிறது. பட்டப் பகலில் ஏற்பட்ட கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறத
No comments:
Post a Comment