விழுப்புரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.ஆனந்தன், உதவி ஆய்வாளர் திரு முரளி, திரு.பாண்டியன் மற்றும் காவலர்கள் தலைமையில் அண்ணாமலை ஹோட்டல் அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்ததை கண்டறிந்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் புண்டாராம் (28), தந்தை பெயர் மோட்டாராம், இரண்டாவது தெரு பாலாஜி நகர் மேல்மருவத்தூர் மற்றும் பாஸ்கரன் வயது (32), தந்தை பெயர் மோகன், ராமதாஸ் தெரு, விட்டலாம் பாக்கம் ரோடு, திண்டிவனம். கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.


No comments:
Post a Comment