விழுப்புரம் நகரப் பகுதியில் விழுப்புரம் நகராட்சி திடலில் பொதுமக்களைக் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடந்த 12ம் தேதி முதல் நடக்கிறது.
பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ராட்சத ராட்டினங்கள், கிரேசி கப், ரயில், டிராகன் டிரைவ், இயற்கை அங்காடிகள், உணவு வகைகள் உட்பட பல்வேறு விளையாட்டு சாதனங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. தினமும் மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment