விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியை சேர்ந்தவர் கபூர் ஷெரீப் மகள் ஹானியா,21.கடந்த 4ம் தேதி இவரது மொபைல் போனுக்கு வந்த 'லிங்க்' உள்ளே சென்றார்.
மர்ம நபர், டெலிகிராம் ஐ.டி., மூலம் தொடர்பு கொண்டு, சிறிய தொகை ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். இதை நம்பி ஹானியா, 500 ரூபாய் செலுத்தி டாஸ்க் முடித்து 1,429 ரூபாய் பெற்றார்.பின், 5ம் தேதி முதல் 6ம் தேதி வரை தனது வங்கிக் கணக்கிலிருந்தும், அவரது தாய், உறவினர் வங்கிக் கணக்கில் இருந்தும் பல தவணைகளாக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 644 ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
பின், டாஸ்க் முடித்து பணத்தைக் கேட்ட போது, மர்ம நபர் தராமல் ஏமாற்றியுள்ளனர்.பணத்தை இழந்ததை அறிந்த ஹானியா, விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment