சட்ட வழி வகுத்துள்ள குறைந்த முத்திரை தீர்வு சட்டப்பிரிவு 47/A1 இன் கீழ் ஆவணங்கள் பதிவு செய்யும் வகையில் பதிவுத்துறை அனுமதிக்க வேண்டும் விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரு விழாவில் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 24 September 2023

சட்ட வழி வகுத்துள்ள குறைந்த முத்திரை தீர்வு சட்டப்பிரிவு 47/A1 இன் கீழ் ஆவணங்கள் பதிவு செய்யும் வகையில் பதிவுத்துறை அனுமதிக்க வேண்டும் விழுப்புரத்தில் நடைபெற்ற முப்பெரு விழாவில் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா நடைபெற்றது கூட்டமைப்பின் நிறுவனர் ஹென்றி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கடலூர் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு ஆலோசனைகள் செய்யப்பட்டன இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கூட்டமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


பின்னர் கூட்டத்தில் தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பட்டா வீட்டு மனைகளை வாங்கி வைத்து பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலை பெற்று பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள பட்டாபனைகளை அங்கீகாரம் பெறும் வகையில் இறுதியாக ஒரு அரிதான வாய்ப்பினை வழங்கி மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாத காலம் எதிர்வரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை ஆக வெளியிட்ட தமிழக அரசுக்கும் தமிழ்நாட்டு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கும் கூட்டமைப்பு சார்பில் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல் வழிகாட்டில் மதிப்பில் உள்ள முரண்பாடுகளை களைவதற்கு சட்ட வழி வகுத்துள்ள குறைவு முத்திரை தீர்வு சட்டப்பிரிவு 47/A1இன் கீழ் ஆவணங்கள் பதிவு செய்யும் பைகையில் பதிவுத்துறை அனுமதிக்க வேண்டும், கட்டுமான ஒப்பந்தத்திற்கான பதிவு கட்டணம் மூன்று சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது இதனை மாற்றி அமைத்து முன்பு இருந்தது போல் ஒரு சதவீதமாக மாற்றம் செய்ய வேண்டும், ரியல் எஸ்டேட் தொழில் ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு ஒரு சதவீதம் என்ற கட்டணத்தை திரும்ப பெற்று முன்பு இருந்தது போல் ரூபாய் பத்தாயிரம் என மாற்றி அமைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்த முப்பெரும் விழாவில் முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ், நகர உள் அமைப்பு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் ஜெய்சங்கர், தேசிய துணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், தலைமை நிலைய செயலாளர் கார்த்திக், மாநில இணைச்செயலாளர் ராஜா ,மாநில பொருளாளர் சுரேஷ்குமார், மற்றும் முரளி ,ஜெய்சங்கர், ராஜா முகமது, ஹலில், மதன், சக்திவேல், முத்துக்குமரன், சேகர், ராஜாராம், ஜெயக்குமார், உள்ளிட்ட பல பொறுப்பாளர்கள் பங்கேற்றன.

No comments:

Post a Comment

Post Top Ad