தூய்மை இந்தியா திட்டத்தினை நினைவு கூறும் வகையில் கோவில் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்த பாரதிய ஜனதா கட்சியினர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 24 September 2023

தூய்மை இந்தியா திட்டத்தினை நினைவு கூறும் வகையில் கோவில் மற்றும் பொது இடங்களை சுத்தம் செய்த பாரதிய ஜனதா கட்சியினர்.

மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்துடன் 'தூய்மை இந்தியா' என்ற பெயரில் திட்டமாக தொடங்கியவர் பிரதமர் மோடி. தூய்மையான பாரதத்தை உருவாக்குவோம் என்ற முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளன்று அக்டோபர் 2-ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

நாட்டில் உள்ள 4,041 நகரங்களில் உள்ள தெருக்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புகளை தூய்மைப்படுத்துவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.


இதனை நினைவு கூறும் வகையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் விவசாய அணி மாவட்டச் செயலாளர் க.முருகன் அவர்களின் தலைமையில் விழுப்புரம் நகரப் பகுதிக்கு உட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய திரௌபதி அம்மன்  கோவில் வளாகம் மற்றும் பொது இடங்களில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்தனர். இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad