திண்டிவனத்தில் ஹிந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் புதுவை அமைச்சர் நமச்சிவாயம் கொடியசைத்து துவங்கி வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலங்கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று விநாயகரை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம் இதனையில் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் அங்காளம்மன் கோவில் அருகே இந்து முன்னணி சார்பாகவிநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
அதை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கொடியசைத்து துவங்கி வைத்தது ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்வலத்தில் நடந்து சென்றார்.பின்பு விநாயகர் சிலைகள் மரக்காணத்தில் கடலில் கரைக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்பதற்கு விழுப்புரம் ஏ எஸ் பி தினகரன் திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment