வார இறுதி நாட்களில் புதுவை மாநிலம் ஒட்டி உள்ள பகுதிகளில் மது கடத்தலை தடுக்கும் பொருட்டு காவல் துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையை துரிதப்படுத்த உத்தரவிட்டு உள்ளனர். இந்த நிலையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் திண்டிவனம் புதுவை சாலை, சந்தைமேடு பகுதி வெளிமேடு பேட்டை,கிளியனூர் சோதனை சாவடி, பெரும்பாக்கம் சோதனைச் சாவடி போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது முறையான ஆவணங்கள் இல்லாத 40 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் கூறுகையில் வாகன ஓட்டிகள் முறையாக ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் இல்லையெனில் வழக்குப்பதிவு செய்யப்படுவது மட்டுமல்லாமல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அதேபோல மது கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் பிணையில் வர முடியாத படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment