விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு திண்டிவனம் உட்கோட்டத்தில் போலீசார் விடிய விடிய வாகன சோதனை முறையான ஆவணங்கள் இல்லாத 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்னும் இரண்டு நாட்களில் கொண்டாடப்பட உள்ளது இதை எடுத்து மாநில முழுவதும் போலீசார் வாகனத்தை மேற்கொண்டு வருகின்றனர், இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின்படி திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன், மேற்பார்வையில் திண்டிவனம் புதுவை தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் கிருபாலக்ஷ்மி மற்றும் ரோஷனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் வெள்ளிமேடு பேட்டை, மயிலம், ஒலக்கூர், போன்ற பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இதுவரையில் முறையான ஆவணங்கள் இல்லாத 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கண்டறியும் அப்ளிகேஷன் மூலமாகவும் சந்தேகப்படும் நபர்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.மேலும் விழாக்களங்களில் சமூக விரோதிகள் மற்றும் பொதுமக்கள் புதுவையில் இருந்து மதுபாட்டலை கொண்டு செல்வது வழக்கம் இதனால் போலீசார் அங்கலம் அங்கலமாக சோதனை செய்து வருகின்றனர்
No comments:
Post a Comment