விழுப்புரம், அக். 04 -
விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக, கண்டாச்சிபுரம் பழனிவேல் தொழில்நுட்ப பயிற்சி பள்ளியில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி இன்று (08.10.2025) காலை 12.00 மணியளவில் நடைபெற்றது. காவல்துறை தலைவர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), சென்னை அவர்களின் உத்தரவுப்படி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர்கள், வன்கொடுமை தடுப்பு சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள், மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு விரிவாக விளக்கமளித்தனர். மேலும், கலந்து கொண்ட மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் சிற்றுண்டி வழங்கி, சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சியை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, விழுப்புரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடத்தினர்.
No comments:
Post a Comment