தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 23 September 2024

தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகமும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் தீவனூர் ஸ்ரீ சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து யாகசாலை வேள்வியும், பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, 108 சங்காபிஷேகம், கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் செய்து இருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad