விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் செவித்திறன் குறைபாடு மனநலம் குன்றிய கண்பார்வையற்ற நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 89மாணவ மாணவிகள் அரசு பொதுத்தேர்வு எழுதினார்கள் இவர்களுக்கு தேர்வு எழுத தனியாக தரைதளத்தில் அதை ஒதுக்கி கொடுக்கப்பட்டது. மொழிப் பாடமான தமிழ் தேர்வு எழுதினர் காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1: 15.மணி வரை தேர்வு எழுதினர்.
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வில் 33 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். ஆசிரியர்கள் வினாத்தாளை படித்து பார்த்து கேள்விகளுக்கு பதில் கேட்க மாண மாணவிகள் அதற்குரிய விடைகளை கூறினார்கள். அதை அந்த ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினார்கள் இதேபோல் கை கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 77 பேரும் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்கள் மற்ற மாணவ மாணவிகளை காட்டிலும் இவர்கள் 166 பேருக்கும் தேர்வு எழுத கூடுதலாக ஒரு 1மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் முருங்கப் பாக்கம் அரசு பெண்கள் பள்ளி மாற்றுத்தினாளி மாணவி ஒருவர் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர், மாணவி சரஸ்வதி கூறும்போது தான் திண்டிவனம் முருங்கப்பாக்கம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி படிப்பதாகவும் தன்னைத் தன் தாய் மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்ததாகவும் மேற்கொண்டு பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று வேளாண்மை துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கப் போவதாகவும் தனக்கு பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியைகளுக்கும் நல்ல முறையில் தேர்வு எழுத உதவியாக இருந்த வால்டர் ஸ்கடர் பள்ளி ஆசிரியை கிரேஸ் அன்பரசி அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன் என கூறினார்.
No comments:
Post a Comment