வணிகர் தினத்தை முன்னிட்டு அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து திண்டிவனம் அனைத்து வணிகர்களின் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.
அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ராம் டெக்ஸ்டைல் வெங்கடேசன் முன்னிலை வகித்தார், காய்கறி சங்கத் தலைவர் எஸ்.இ. ஏழுமலை அனைவரையும் வரவேற்றார், இந்த ஊர்வலம் நேரு வீதியாகச் சென்று காந்தி சிலை அருகே நிறைவுற்றது.
இதனைத் தொடர்ந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்து வணிகர் சங்க கொடியேற்றி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்பு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது இந்த ஊர்வல நிகழ்ச்சியில் ஜவுளிகள் வியாபாரிகள் சங்க தலைவர் பி. ஆர். எஸ். ரங்கமன்னார் செட்டியார். நகை வியாபாரிகள் சங்க தலைவர் ராம்லால் ரமேஷ். பழக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணன். ஹோட்டல் பங்கஜம் உரிமையாளர் புருஷோத்தம ரெட்டியார். சங்கர் கட்பிஸ் உரிமையாளர் சுரேஷ்பாபு. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் பாத்திரகடை உரிமையாளர் சங்க தலைவர் பால் பாண்டியன் ராமேஷ் நன்றி கூறினார். கோடைக்காலம் முடியும் வரையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் திண்டிவனம் ராம் டெக்ஸ்டைல்ஸ் முன்பு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment