திண்டிவனம் நேரு வீதி சேர்ந்தவர் சிவ பாலாஜி வயது 53 அவர் தனது செல்போனில் சிவனடியார்கள் பதிவு பார்த்துக் கொண்டிருந்தார் அப்போது யூ டியூபில் சிதம்பரம் நடராஜர் தில்லைகாளியம்மன் பற்றி அவதூறாக பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் பல சிவனடியார்களும் பார்த்து திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் ஆலயம் முன்பு ஒன்று கூடினர்.
இதை பதிவிட்ட மைனர் வீரமணியை கண்டித்து திண்டிவனம் சிவன் கோயில் முன்பு 50 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் சிவ பாலாஜி தலைமையில் சிவனடியார்கள் அங்கிருந்து ஊர்வலமாக நேரு வீதி வழியாக புறப்பட்டு வந்து சமூக வலைத்தளத்தில் நடராஜர் பற்றி அவதூராக வீடியோக்கள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
No comments:
Post a Comment