திண்டிவனம் அரிமா சங்கத்தின் சார்பில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனை மூலம் திண்டிவனம் நகரில் கண் சிகிச்சை முகாம் மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு அரிமா சங்கத் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார் மாவட்ட கண் மருத்துவமனை அலுவலர் மற்றும் திண்டிவனம் அரிமா சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் ரவிச்சந்திரன் அரிமா சங்க மாவட்ட தலைவர் கார்த்திக், மண்டலத் தலைவர் ஓவியர் தேவ், ராகவேந்திர ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
மரகதாம்பிகை கல்வி குழுமம் துணைத்தலைவர் சங்க செயலாளர் கே டி ஆர் வேல்முருகன் முகாமை துவக்கிவைத்தார் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஸ்வாதி தலைமையியல் மருத்துவர்கள் மானஸ்வினி, லாம் சுதா, திவ்யா ஆகியோர் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் 350 நபர்களுக்கு பரிசோதனை செய்து 52 நபர்களை கண்புரை அறுவை சிகிச்சைக்காக புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வட்டாரத் தலைவர் கிரிதர பிரசாத் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், முரளிதரன் துணைத்தலைவர்கள் அன்னை சஞ்சீவி, சாய்நாத், சங்கத்தின் உறுப்பினர்கள் கல்கண்டு ராஜேந்திரன், பழனிக்குமார் தலைமையாசிரியர் ராஜவேலு ஆசிரியர்கள் ராமன், செந்தில், சாம்பவி, உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர் சங்கத்தின் முகாம் அமைப்பாளர் ராகவன் பொருளாளர் உமையவன் நன்றி கூறினர்.
No comments:
Post a Comment