ஆள் மாறாட்டம் துண்டு சீட்டு வைத்து எழுதுதல் காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் துறை அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என 4,491 பேரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் வருவாய் துறை அலுவலர்கள் அடங்கிய 432 பறக்கும் படையினரும் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதிய 227 மாணவர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கண் பார்வையற்ற செவித்திறன் குறைபாடு மனநலம் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறுகள் பாதிக்கப்பட்ட 99 மாணவ-மாணவிகளும் மற்றும் கை கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 128 பேருமாக மொத்தம் 227 பேர் தேர்வு எழுதினார்கள்
பொதுத் தேர்வு நடைபெறும் மையங்களில் போலீசார் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் மேலும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment