ஸ்டெப்ஸ் அறக்கட்டளை நடத்தும் நோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 May 2022

ஸ்டெப்ஸ் அறக்கட்டளை நடத்தும் நோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம்.

திண்டிவனத்தில் ஸ்டெப்ஸ் அறக்கட்டளை நடத்தும் நோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது, நத்தமேடு கோபாலபுரத்தில் பழங்குடி நரிக்குறவர் குடியிருப்பு மக்களின் உடல் நலம் கருதியும் இம்மக்களுக்கு சமூக மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வழக்கறிஞர் பூபால்.ஸ்டெப்ஸ்  அறக்கட்டளை தலைமையில்   நோய் கண்டறிதல் விழிப்புணர்வு சிறப்பு   மருத்துவ முகாம் நடைப்பெற்றது.


பழங்குடி நரிக்குறவ மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகத்தில் ஏற்படும் விளைவுகளையும் எதிர்கொள்ளும் விதங்களையும் தீனராஜேஷ் ஸ்டெப்ஸ் அறக்கட்டளை தலைவர் முன்னிலை வகித்து எடுத்துக் கூறினார். இம்மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் மருந்து மாத்திரைகளையும் ஸ்டெப்ஸ் அறக்கட்டளை சார்பில் மருத்துவர் கிருஷ்ணவேணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடி நரிக்குறவ மக்கள் பயன்பெற்றனர்.


இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் வெங்கடேசன் , ஸ்டெப்ஸ் அறக்கட்டளை பொறியாளர் மேனகா, செவிலியர்கள் யமுனா, கவியரசி, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad