முன்னாள் பாரத பிரதமர் அமரர் பாரத ரத்னா திரு.ராஜீவ் காந்தி, அவர்களின் 31. வது நினைவு நாள். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 May 2022

முன்னாள் பாரத பிரதமர் அமரர் பாரத ரத்னா திரு.ராஜீவ் காந்தி, அவர்களின் 31. வது நினைவு நாள்.

முன்னாள் பாரத பிரதமர் அமரர் பாரத ரத்னா திரு.ராஜீவ் காந்தி, அவர்களின் 31. வது நினைவு  முன்னிட்டு திண்டிவனம் நகர காங்கிரஸ் கமிட்டியில் சார்பில் மாலை அணிவித்து மலர்துவி நினைவு அஞ்சலி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமையில் நடைபெற்றது. 


முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா திரு.ராஜீவ் காந்தி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .பின்னர்  ஒழிப்போம் ஒழிப்போம் தீவிரவாதத்தை ஒழிப்போம் மதிப்போம் மதிப்போம் சட்டத்தை மதிப்போம், என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்களையும் எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, மத நல்லிணக்க நல்லுணர்வு, ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும், உடமைகளுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்து போராடவும், பயங்கரவாதத்தை அனைத்து நிலைகளிலும் எதிர்த்துப் போராடவும், அமரர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி நினைவு நாளான இன்று  பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நகர தலைவர் விநாயகம், முன்னிலை வகித்தார், முன்னாள் மாவட்ட தலைவர் தனுஷ், விக்கிரவாண்டி நகர தலைவர் குமார்,மாவட்ட எஸ் .சி. எஸ். டி. தலைவர் இராமமூர்த்தி, நகர துணைத்தலைவர். தட்சிணாமூர்த்தி, மனித உரிமை துறை சக்திவேல், நகர செயலாளர். வழக்கறிஞர் அஜிஸ், விஜயன், கனகராஜ். மெடிக்கல் வெங்கட், ஊடகப்பிரிவு மாவட்ட பொதுச் செயலாளர்.ஜெய்கணேஷ், சரண்ராஜ், அர்ஜுனன், சாமிநாதன் ஐய்யர், வட சிறுவலூர் நாராயணசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad