திண்டிவனம் மேம்பாலம் அருகே அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும் - விசிக கோரிக்கை. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

திண்டிவனம் மேம்பாலம் அருகே அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும் - விசிக கோரிக்கை.

திண்டிவனத்தில் மேம்பாலம் கட்டும்போது அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலைகளை மீண்டும் நிறுவுவதற்காக அனுமதி வழங்க கோரி விசிக மாவட்ட செயலாளர் எழுத்தாளர் சேரன். தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர் 


திண்டிவனத்தில் 1996ஆம் ஆண்டு மேம்பாலம் பணியின்போது அங்கு இருந்த அம்பேத்கர் சிலைகளும் அகற்றப்பட்டது, இதனால் அப்போது விசிக சார்பில் போராட்டம் நடைபெற்றது. மேம்பாலத்தில் அமைக்கப்படும் ரவுண்டானாவில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.


அதாவது திண்டிவனத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக கிடங்கல் 2 ராஜன் தெரு பழைய திருவள்ளூர் போக்குவரத்து பேருந்து நிலையம் அருகில் கிடங்கல் 2 மாதா கோயில் சிங்காரத் தோப்பு தெரு அதேபோல் தலைமை தபால் நிலையம் அருகே ஆகிய இடங்களில் அம்பேத்கர் திருவுருவ சிலை வைக்கப்பட்டிருந்தது .

மேம்பால பணியின் போது அங்கிருந்த அம்பேத்கர் சிலைகள் அகற்றப்பட்டன  அகற்றப்பட்ட சிலைகளையும் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது .அதனால் அப்போதைய விசிக சார்பில் போராட்டம் நடைபெற்றது மேம்பாலத்தில் அமைக்கப்படும் ரவுண்டானாவில் அம்பேத்கர் சிலை மீண்டும் நிறுவப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என விசிக வடக்கு மாவட்ட செயலாளர் எழுத்தாளர் சேரன். தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நகர்மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரனிடம் மீண்டும் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலும் 3 மனுக்கள் அளிக்கப்பட்டது.

அப்போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனபாண்டியன், உதவி பொறியாளர் தேவநாதன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன். சந்திரன். தொகுதி செயலாளர் வழக்கறிஞர் பூபால். மாவட்டச் செயலாளர் (ஊடகப்பிரிவு) வக்கீல் எழில் மாறன் .நகரச் செயலாளர் இமயன். நகர பொருளாளர் காமராஜ். எழிலரசன். வக்கீல்கள் மாத்தமிழன். பிருந்தா அருள். சிந்தனை  வேந்தன். கதிர். அப்புன் .ஆறு. அபி. அமுது.சேகர். உள்பட ஏராளமான வி.சி.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad