திண்டிவனம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு அருவி போல் கொட்டிய தண்ணீர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

திண்டிவனம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு அருவி போல் கொட்டிய தண்ணீர்.

திண்டிவனத்தில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் அருவி போல் கொட்டியது.


குடிநீர் குழாய் உடைப்பு

திண்டிவனம் நகர பகுதிக்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக் கோட்டையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குழாய்கள் மூலம் திண்டிவனம் நகர பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தக் குடிநீர் திண்டிவனம் ஓமந்தூரார் பார்க்கில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது அந்த நீர் மேல்நிலை தொட்டிக்கு கண்டரக்கோட்டையில் இருந்து வரும் தண்ணீரை மின்மோட்டார் மூலம் ஏற்றி பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் விநியோகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திண்டிவனம் இந்திராகாந்தி பழைய பஸ் நிலையம் அருகில் மயிலம் விழுப்புரம் நெடுஞ்சாலைக்கு செல்லும் வழியில் இருந்து தரைப்பாலம் கடந்த மழையில் அடித்து செல்லப்பட்டது.


இதையடுத்து அங்கு தற்காலிகமாக தரைப் பாலம் அமைக்கப்பட்டது அந்த நிலையில் தரை பாலத்தின் வழியாக பல வாகனங்கள் சென்று பாதை சீர்குலைந்து போயிருந்தது  இந்நிலையில் நேற்று குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றினார். 

கிடங்கல் 1 ஒத்தவாடை தெரு செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் அருகில் நகராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட இடத்திலிருந்து சற்று தொலைவிலேயே பாலத்தின் பக்கத்தில் குடிநீர் குழாய் சரிபார்க்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அப்பொழுது எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது நகராட்சி ஊழியர் செய்வது அறியாது உடனடியாக  குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள வால்வை மூடினர். 


அதற்குள் தண்ணீர் பீச்சி அடித்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக ஓடையில் கலந்தது விரைந்து வந்த நகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் பணியாளர்கள் ஈடுபட்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad