இதுதொடர்பாக சுந்தராஜன் அவரது தந்தையுடன் தெரிவித்தார். சகமாணவர்கள் என்பதால் தந்தையும் இதனை கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் சிறுவன் பள்ளிக்கு செல்வதைத் தவிர்த்தார் இதனால் மன உளைச்சல் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.இந் நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து சுந்தர்ராஜ் தனது பாட்டி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கே உள்ள கருமாதி கொட்டகை அருகே நின்றிருந்த 3 மாணவர்கள் இயல்பாக இங்க வாடா என சாதிப்பெயரை சொல்லி திட்டி அழைத்து அங்கே கிராமப்புறத்தில் சுகாதாரத்திற்காக ஒதுக்குப்புறத்தில் குப்பைகளை கொட்டி எரியூட்ட பட்டுள்ளனர் அந்த இடத்தில் சிறுவனை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது .பின்னர் நெருப்பில் விழுந்து படுகாயமடைந்த சுந்தர்ராஜ் துடித்து கூச்சலிட்டார்.
அங்கிருந்த மூன்று பேரில் 2 மாணவர்கள் அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளனர் பின்னர் சிறுவனின் தாய் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிறுவனின் உடலில் அதிக அளவில் தீக்காயம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் மண்ணம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மாணவனின் சொந்த ஊரான காட்டு ச்சிவிரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியப்பன் தன் மகனை தீயில் தள்ளி விட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்ததின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுந்தர்ராஜனை விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சேரன். பழங்குடி இருளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி. தொகுதி செயலாளர் வழக்கறிஞர் பூபால், நகர செயலாளர்கள் இமையன் எழில்அரசன், நகர பொருளாளர் காமராஜ். வழக்கறிஞர்கள் எழில்மாறன், பிருந்தா அருள், ராமு மற்றும் 50 மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்று கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுந்தர்ராஜனை நேரில் பார்த்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர், பின்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சேரன் தொலைக்காட்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் பேசியதாவது. வன்னிய சமூகத்தை சேர்ந்த சக மாணவர்களால் தீயில் தள்ளி விடப்பட்ட சுந்தர்ராஜன் இருளர் சமூகத்தை சேர்ந்தவர். சக மாணவர்களால் அவரை கேலியும் கிண்டலும் செய்ததாலும் மன உளைச்சலில் இருந்த அவர் பலமுறை வீட்டிலும் தலைமையாசிரியர் இடத்திலும் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்காததால் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சுந்தரராஜன் தகப்பனார் கன்னியப்பன் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும் சிகிச்சை பெற்று வரும் மாணவன் இடத்தில் வாக்குமூலத்தையும் பெற்ற வெள்ளிமேடு போலீசார் ஏன் இன்னும் வழக்கு பதியப்படவில்லை பாதிக்கப்பட்ட மாணவனின் தகப்பன் கன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் SC/ST. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியாதது ஏன்? என மாணவனின் பெற்றோர் கதறுகிறார்கள். தமிழகத்தில் சமூக நீதி ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் இதுபோன்ற காவல்துறை அலட்சியப் போக்கினால் தமிழக சமூகநீதி ஆட்சிக்கு இழக்கு ஏற்படும் வகையில் போலீசார் நடந்து கொண்டு இருக்கிறார்கள். இதனை மாண்புமிகு தமிழக முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் பல வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றாலும் அது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தாலும் குற்றவாளி எனத் தெரிந்தும் குற்றவாளிகளை அவர்கள் கைது செய்யப்படுவதில்லை இது மிகுந்த வேதனை அளிக்கிறது இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
எனவே காவல்துறை அதிகாரிகள் சாதிய வாதிகளுக்கு துணை போகாமல் கொடுக்கப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றவாளிகளை SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறது என கூறினார்.
No comments:
Post a Comment