திண்டிவனத்தில் வீட்டின் எதிரே இருந்த விநாயகர் சிலை திருடு போனது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டிவனம் ரொட்டிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் சீனிவாசன் வயது 55 இவரது வீட்டின் எதிரே சுவற்றில் சிறிதாக ஆலயம் வைக்கப்பட்டு அதில் ஒரு அடி உயரமுள்ள கல்லாலான விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர் இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் விநாயகர் சிலையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டி.என்.கே. பிரபு .மற்றும் அக்கட்சியை சேர்ந்த சிலர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த தனிப்பிரிவு போலீசார் ஆதி. மற்றும் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தனர்.
மேலும் விநாயகர் சிலையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment