பொறுப்பாளர்கள். அனைவரும் கலந்து கொண்டனர். இதில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் நகரச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த கபிலனை தவிர மற்ற 9 பேரும் அமைச்சர் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவதாக கூறி அதற்கான கடிதத்தை அமைச்சரிடம் கொடுத்தனர். நகர செயலாளர் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை முன்னாள் நகர செயலாளர் கபிலன், புறக்கணித்தார். அதனை தொடர்ந்து ஆசிரியர் கண்ணன் தவிர மற்ற வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் அனைவரும் வாபஸ் பெற்றனர்.
திண்டிவனம் நகர செயலாளராக ஆசிரியர் கண்ணன். நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார் மேலும் அவைத்தலைவர், மாவட்ட பிரதிநிதி, பொருளாளர், நகரத் துணைச் செயலாளர் பதவிக்கு அதிகளவில் நிர்வாகிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், யாரை நியமிப்பது என பிரச்னை எழுந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் மஸ்தான், தேர்தல் பொறுப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் நகர அமைப்பின் நிர்வாகிகளை ஒரு மனதாகத் தேர்வு செய்ய விண்ணப்பித்திருந்த தி.மு.க., நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அதன்பிறகு, திண்டிவனம் நகர அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, நகர அவைத் தலைவராக நகர மன்றத் தலைவரின் கணவர் RRS.ரவிச்சந்திரன், பொருளாளராக சின்ன ராஜேந்திரன், துணை செயலாளர்களாக தாஜுதின், கௌதமன், ரேணுகா, மாவட்ட பிரதிநிதிகளாக சின்னதுரை, ராஜசக்தி,.V.S. முருகன், ஆகியோர் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment