திண்டிவனம் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

திண்டிவனம் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

திண்டிவனம்  திந்திரிணீஸ்வரர் கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது, திண்டிவனம் அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ திந்திரிணீஸ்வரர் திருக்கோவிலில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை திண்டிவனம் நிலையம் சார்பில் தீ தடுப்பு போலி ஒத்திகை மற்றும் செயல்விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் கதிர்வேலு தலைமை தாங்கினார் போக்குவரத்து நிலைய அலுவலர் முருகையன். தீயணைப்பு தடுப்பு  மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது தீ விபத்து அல்லது மின் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பு துண்டிப்பு குறித்தும் தீ ஷஎப்படிக் கட்டுப்படுத்தி அணைப்பது செயல் விளக்கம் அளித்து பேசினார்.

நிலைய தீயணைப்பு பணியாளர்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் செய்து காட்டினர், நிகழ்ச்சியில் ஆலய செயல் அலுவலர் சிவக்குமார் அர்ச்சகர்கள் இராதா குருக்கள், கிஷோர்குமார், எழுத்தர் சங்கர், திருக்கோயில் திருவிளக்கு பணியாளர் நாராயணன், வாசு, இரவு பாதுகாவலர் குருநாதன், முத்துமாரியம்மன் கோயில் பூசாரி பன்னீர், நீலகண்டன், உள்பட பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad