திண்டிவனத்தில் பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 May 2022

திண்டிவனத்தில் பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்.

தமிழகம் முழுவதும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 1991 ஜூன் 11 தேதி அன்று கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து உச்சநீதிமன்ற தீர்ப்பால் நேற்று விடுதலை செய்யப்பட்டார். 


விடுதலையை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடைபெற்றது


இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நகர தலைவர் விநாயகம், தலைமையில் திண்டிவனம் காந்தி சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு 10 மணியிலிருந்து 11 மணி வரை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தனுஷ், மாவட்ட எஸ்.சி எஸ்.டி தலைவர் ராமமூர்த்தி, நகர துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மனித உரிமை துறை தலைவர் சக்திவேல், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வரதராஜ், பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பொன் ராஜா, நகர செயலாளர் வழக்கறிஞர் அஜிஸ்,விஜயன் கனகராஜ், மெடிக்கல் வெங்கட், விழுப்புரம் மாவட்ட ஊடக மையம் பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ், அர்ஜுனன், இளைஞர் காங்கிரஸ் அஜித், சாமிநாதன் ஐய்யர், வட சிறுவலூர் நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad