திண்டிவனம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக் கோவில் தேரோட்ட திருவிழா உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

திண்டிவனம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக் கோவில் தேரோட்ட திருவிழா உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கனகவல்லி நாயகி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கோயில் பிரம்மோற்சவ விழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.


தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டசாமி வாகனத்தில்  எழுந்தருளி வீதி உலா வரும்  நிகழ்ச்சி நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்  நேற்று காலை 6:00 மணி அளவில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பக்தர்களுடன் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். 

உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ராம் டெக்ஸ்டைல் ஸ் உரிமையாளர் தியாகராஜ செட்டியார், வெங்கடேசன்,  பி.ஆர்.எஸ். ஜவுளிக்கடை உரிமையாளர் ரங்கமன்னர் செட்டியார், சரத்,நகர மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், பால்பாண்டியன் ரமேஷ், தொழிலதிபர் கே .ஆர் .எஸ். சுப்பராயலு, நியூ பாண்டியன் சுரேஷ், கே.எஸ்.பி. ஜவுளி ரெடிமேட்ஸ் உரிமையாளர் தினகரன் செட்டியார், பி. என் .ஆர். லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் நாராயணன், சரவணன். சாம்ராஜ் லேப் உரிமையாளர் சம்பத்குமார், ஓம் சக்தி ஏஜென்சி உரிமையாளர் சக்திவேல், தி.மு.க .நகர செயலாளர் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன். அரசு வழக்கறிஞர் ஆதித்தன், கார்த்திக் ஸ்டூடியோ உரிமையாளர் வழக்கறிஞர்கார்த்திக். ஒப்பந்ததாரர் டி.கே. குமார், மெட்ரோ பஜார் உரிமையாளர் ஸ்ரீகரன், கே எஸ் .எஸ். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செந்தில், சரஸ்வதி பங்கஜம் ஹோட்டல் உரிமையாளர் புருஷோத்தம ரெட்டியார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டி. என் .கே .பிரபு, நியு சங்கர் கட்பீஸ் பாபு, ஜெயந்தி கட்பீஸ் ரெடிமேட்ஸ் குமாரவேலு. பா.ஜ.க. நகர தலைவர் தினேஷ்குமார், அன்னை மளிகை  சஞ்சீவி. நியூ ராசிபாத்திரம்மெட்டல்ஸ் உரிமையாளர் முஸ்தபா, அறநிலை துறை செயல் அலுவலர் சிவக்குமார். எழுத்தர் சங்கர். நாகராஜ், திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சக்கரவர்த்தி, கவுன்சிலர்கள். ஆசிரியர் சீனிராஜ், ரேகா நந்தகுமார், வழக்கறிஞர். எம். டி. பாபு, சந்திரன். உள்பட திண்டிவனம் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 


முன்னதாக திண்டிவனம் காவல்துறையினர், மின்சாரத் துறையினர், தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறையினர், அதிக அளவில் பணியில் ஈடுபட்டனர். தேர் ஈஸ்வரன் கோயில் வீதி காமாட்சி அம்மன் கோயில் வீதி நேரு வீதி ராஜாஜி வீதி வழியாக வந்து பெருமாள் கோயில் அடைந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ், செயல் அலுவலர் ஸ்ரீ கன்யா, பட்டாச்சாரியார்கள் ரகு, ஸ்ரீதர், பங்கேற்று கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad