திண்டிவனம் தபால் நிலையம் அருகே விசிக, சிபிஜ(எம்), சிபிஜ ஆகிய கட்சிகள் இணைந்து பெட்ரோல், டீசல், கேஸ் விலைவாசி உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியலுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் திண்டிவனம் விசிக நகர செயலாளர் இமயன் தலைமையிலும் விசிக நிர்வாகி வழக்கறிஞர் பூபால் சிபிஎம், சிபிஐ, நிர்வாகிகள் ராஜாராம், கோவிந்தன், முன்னிலையிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மு.செ.எழிலரசன், நகர செயலாளர் (வடக்கு) வரவேற்புரையாற்றினார், விசிக மாவட்ட செயலாளர் ஏ.சேரன், சிபிஎம், அறிவழகன், சிபிஐ, இன்ப ஒளி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
விசிக, நிர்வாகிகள் எழியில் மாறன், ஓவியர்பாலூ,சீனிவாசராவ், சிந்தனை வேந்தன்,சி.காமராஜ் சந்திரசேகர், தமிழரசன், ஆனந்தராஜ், அப்புன் கோ.ஆறு சிபிஎம் கண்ணதாசன், கோவிந்து, சதிஷ்கமார் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி தபால் நிலையம் அருகே திண்டிவனம் ஏ.எஸ் பிஅபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment