போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் ஜிப்மரில் பரிதாபமாக சாவு. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 May 2022

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் ஜிப்மரில் பரிதாபமாக சாவு.

திண்டிவனம் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் ஜிப்மரில் பரிதாபமாக சாவு, சாவில் சந்தேகம் என உறவினர்கள் போலீசில் புகார்.


திண்டிவனம் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்  புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.


கடலூர் தூக்கணம்பக்கம் அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் வயது 40 இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது இதனால் உறவினர்கள் திண்டிவனம் அடுத்த பாஞ்சாலம் அருகே உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக கடந்த 14ஆம் தேதி சேர்த்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி பார்த்திபனுக்கு வலிப்பு ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 21ந் தேதி பார்த்திபனின் மனைவி பெரியநாயகிக்கு அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை மையத்தில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தது பின்னர் உறவினர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்த்திபனை பார்த்து உடனிருந்து சிகிச்சை அளித்து வந்தனர் ஆனால் பார்த்திபனின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர் இந்நிலையில் நேற்று முன்தினம் பார்த்திபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதுகுறித்து பார்த்திபனின் உறவினர்கள் நேற்று ரோசனை காவல் நிலையத்தில் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இச்சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad