இதனைத் தொடர்ந்து ஓங்கூரில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார் அப்போது நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் விவசாயிகள் கொண்டுவந்த 4000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டதாகவும் எம்.எல்.ஏ., அர்ஜுனன் அவர்களிடம் விவசாயிகள் முறையிட்டனர். மேலும் ஓங்கூரில் உள்ள ஆரம்ப தொடக்கப்பள்ளியில் சுற்றுப்புற சுவர்களையும் பள்ளி பராமரிப்பு குறித்து தலைமை ஆசிரியரிடம் ஆலோசனை நடத்தினார். பின்பு பாதிரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட பள்ளி மாணவர்களை உணவுத் தரம் குறித்து உணவை சுவைத்துப் பார்த்து பள்ளி மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களிடமும் ஆலோசித்தார் பள்ளி முழுவதும் ஆய்வு செய்தார்.
இதில் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் ஏப்பாக்கம் ராஜசேகரன், திண்டிவனம் முன்னாள் திண்டிவனம் நகராட்சி சேர்மன் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் நடராஜன், சித்தாமூர் முருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி உதயகுமார், ஒலக்கூர் ஒன்றிய மாணவரணி செந்தாமரைக்கண்ணன், மானூர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் இந்திரா முத்துகிருஷ்ணன், பிரகாஷ், அஜித், முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,
No comments:
Post a Comment