தூக்கிட்டு மாணவர் தற்கொலை; போலீசார் விசாரணை. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

தூக்கிட்டு மாணவர் தற்கொலை; போலீசார் விசாரணை.

மதுராந்தகம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாரதி என்பவரது மகன் சரத்குமார் வயது( 21)  இவர் திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் DME இறுதி ஆண்டு பயின்று வந்தார். இறுதியாண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

அவரது உறவினர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  அவர் வரும் வழியிலேயே இறந்திருப்பது தெரியவந்தது மேலும் உயிரிழந்த சரத்குமாரின் உடல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓரத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலை கூறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.


இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ஒன்றுகூடினர் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சொந்த ஊரான மதுராந்தகம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad