காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 July 2022

காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோனியா காந்தி அமலாக்கத்துறை சுமார் 6 மணி நேரம் விசாரணைக்கு நடத்தப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர் திண்டிவனம் காந்தியா திடலில் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நேஷனல் ஜெரால்ட் வழக்கில் ராஜீவ் காந்தியை தொடர்ந்து சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி வைத்து முதலில் கேள்விகள் ஏதும் கேட்காமல் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தொடர் விசாரணைக்கு அலை கழித்துள்ளதை கண்டித்தும் ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சிகளை தொடர்ந்து பழிவாங்கும் வகையில் அரசு தன்னாட்சி நிறுவனங்களை ஏவி விடுவதை கண்டித்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் திட்டமிட்ட செயலை விட கோரியும் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் திண்டிவனத்தில் நடைபெற்றது.


இதில் நகர தலைவர் விநாயகம் மாவட்ட பொருளாளர் கருணாகரன் முன்னாள் மாவட்ட தலைவர் தனுஷ், விக்கிரவண்டி நகரத் தலைவர் குமார், மாவட்ட எஸ்சி எஸ்டி தலைவர் ராமமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகர துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, செஞ்சி சூரியமூர்த்தி, கோனை ராஜா, மண்ணாங்கட்டி, ஒலக்கூர் புவனேஸ்வரன், மயிலம் செல்வம், வல்லம் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் இருதயராஜ், மதன்குமார், இளைஞர் காங்கிரஸ் பார்த்திபன், ஜானி, மாவட்ட ஊடகப் பிரிவு ஜெய் கணேஷ், நகர பொதுச்  செயலாளர் பொன் ராஜா, நகரச் செயலாளர் அஜிஸ், மாவட்ட செய்தி தொடர்பாளர் மெடிக்கல் வெங்கட், கனகராஜ், ரஹ்மத்துல்லா, சாமிநாதன், நாராயணசாமி, முகமது ஷரீப், அர்ஜுனன், மற்றும் மகளிர் அணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு இந்த போராட்டத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad